பின் இருக்கை உள்ள வாகனங்களின் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கான அறிவிப்பு: கட்டாய நடைமுறையில் மாற்றம்
பின் இருக்கைகளில் பாதுகாப்பு பட்டிகள் இல்லாத வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழையும் போது பின்பற்ற வேண்டிய கட்டாய நடைமுறைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், உற்பத்தியாளரால் பின்வரிசை நடுவிலுள்ள இருக்கைக்கோ அல்லது ஏனைய பின் இருக்கைகளுக்கோ பாதுகாப்புப் பட்டிகள் பொருத்தப்படாத வாகனங்கள், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது பின்பற்ற வேண்டிய சில விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மூன்று மாத காலத்திற்கு நடைமுறை
இந்தச் சலுகை நேற்று (20.03.2026) முதல் ஜூன் மாதம் 19ஆம் திகதி வரை மூன்று மாத காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2011ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மோட்டார் வாகன (அதிவேக நெடுஞ்சாலை) ஒழுங்குவிதிகள் திருத்தப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
