ஈராக்கில் 24 மணி நேரத்தில் 27 அதிரடி தாக்குதல்கள்! பற்றியெரிந்த எதிரியின் தளங்கள்
ஈராக்கில் உள்ள “இஸ்லாமிய எதிர்ப்பு” (Islamic Resistance in Iraq) அமைப்பு, கடந்த 24 மணி நேரத்தில் 27 தாக்குதல்கள் நடத்தியதாக தெரிவித்துள்ளது.
இதில் பல ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு, “ஈராக் மற்றும் பிராந்தியத்தில் உள்ள எதிரி தளங்கள்” குறிவைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.
மீண்டும் ட்ரோன் தாக்குதல்கள்
இதற்கிடையில், பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள அமெரிக்க தூதரக வசதிகள் மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Agence France-Presse தகவலின்படி, அமெரிக்க இராணுவ பணியாளர்கள் தங்கியிருப்பதாகக் கூறப்படும் அந்த தூதரக மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மையம் மீது குறைந்தது மூன்று தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
மூன்றாவது தாக்குதலுக்குப் பிறகு, அந்த வளாகத்திற்கு அருகில் தீ விபத்து ஏற்பட்டதாக ஒரு அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவிற்குள் நுழைந்த யுத்தம்! டியாகோ கார்சியா தீவில் பல்லிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்கள் - ஈரான் அதிரடி