இலங்கைக்கான எரிபொருள் கையிருப்பு தொடர்பில் அதிகாரிகள் வெளியிட்டுள்ள மகிழ்சித் தகவல்
இலங்கையில் QR பிரச்சினை முடிவுக்கு வந்துள்ள நிலையில் எரிபொருள் போதுமானளவு உள்ளதாக அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் சிலர் கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, மே மாதம் இறுதி வரை போதுமான அளவு எரிபொருள் உள்ளதென தெரியவந்துள்ளது.
மே மாதம் இறுதி வரைக்கும் தேவையான எரிபொருள் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவை நாட்டை வந்தடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
எரிபொருள் கையிருப்பு
இந்த கலந்துரையாடலின் போது 5 கப்பல்கள் இலங்கையை நோக்கி வரவுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த 5 கப்பல்களும் ஏப்ரல் மாதத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாட்டை வந்தடையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
QR நடைமுறை
ஏப்ரல் மாதத்தின் இறுதிக்கு பின்னரும் ஒன்று அல்லது இரண்டு கப்பல்கள் நாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய, மே மாதத்திலும் தடையற்ற எரிபொருள் வழங்குவதற்கு தேவையான நடடிவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும் QR நடைமுறையை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ஜீவாவின் தந்தை, தயாரிப்பாளர் RB சவுத்ரி விபத்தில் மரணம்! அதிர்ச்சியில் சினிமா துறை Cineulagam
சன் டிவி சீரியலில் நாயகனாக நடிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகர்... யார், என்ன தொடர், முழு விவரம் Cineulagam