தேசிய அடையாள அட்டை பெறுவது தொடர்பில் ஆட்பதிவு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
புதிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்குவது தொடர்பில் ஆட்பதிவுத் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
15 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் பதிவு செய்து இவ்வாறு புதிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.
கைரேகைகள் மற்றும் இரத்த வகையும் உள்ளடக்கம்
Sri Lanka Unique Digital ID என அழைக்கப்படும் இந்த புதிய அடையாள அட்டையில் கைரேகைகள் மற்றும் இரத்த வகை உள்ளிட்ட நபரின் வாழ்க்கை தகவல்களுக்கு மேலதிகமாக உயிரியல் தகவல்களும் உள்ளடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அடையாள அட்டை வழங்குவதில் இந்திய கடன் உதவியுடன் வழங்கப்படும் எனவும், ஒன்றரை வருடத்திற்குள் 17 மில்லியன் மக்களை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.