இன்று முதல் புதிய நடைமுறை - EPF உறுப்பினர்களுக்கான தகவல்
இலங்கையில் உள்ள ஊழியர் சேமலாப நிதி (EPF) உறுப்பினர்களுக்கான இணையவழிப் பதிவு நடைமுறை ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதன்படி குறித்த நடைமுறையானது இன்று (29.12.2025) முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படவுள்ளது.
தொழில் அமைச்சில் இதற்கான நிகழ்வு நடைபெறவுள்ளது.
டிஜிட்ட முறையில் பதிவு
இந்த விசேட நிகழ்வில், அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ மற்றும் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க ஆகியோர் கலந்துகொண்டு இப்புதிய திட்டத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளனர்.

இதன் மூலம் உறுப்பினர்கள் இனி டிஜிட்டல் முறையில் தங்களை எளிதாகப் பதிவு செய்துகொள்ளும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஊழியர்களின் நலன்களை மேம்படுத்துவதே இந்த அரச முயற்சியின் முக்கிய நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |