உள்நாட்டு பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரிக்க விசேட நடவடிக்கை
நாட்டில் பெரிய வெங்காய விதை உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், விசேட விதை உற்பத்தி கிராமமொன்றை ஆரம்பிப்பதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டின் வருடாந்த பெரிய வெங்காயத் தேவைப்பாடானது 03 இலட்சத்து 25000 மெற்றிக் டொன்னாகக் காணப்படும் போதிலும், உள்நாட்டில் தற்போது 50,000 மெற்றிக் டொன் வெங்காயமே உற்பத்தி செய்யப்படுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதற்கான நீண்டகாலத் தீர்வாக உள்நாட்டு வெங்காய உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பெரிய வெங்காய உற்பத்தி
அதன் ஒரு கட்டமாக விசேட விதை உற்பத்தி கிராமம் ஒன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நடப்பு வருடத்திற்குள் உள்நாட்டு வெங்காய உற்பத்தியை 70 ஆயிரம் மெற்றிக் டொன் வரை அதிகரிப்பது திட்டத்தின் பிரதான இலக்காகும் என விவசாயத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில் அதற்காக அநுராதபுரம் மாவட்டத்தின் நாச்சதூவ விவசாயக் குடியேற்றப் பகுதி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசம் எதிர்காலத்தில் பெரிய வெங்காய விதை உற்பத்தி கிராமமாக அபிவிருத்தி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் பி. சிசிர குமார தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அதிக 100 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்த நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா? Cineulagam
குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri
3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்: போர்ச்சுகல் பொலிஸார் அதிரடி News Lankasri