பிராந்திய விமான போக்குவரத்து மத்திய நிலையமாக மாற்றம் பெறவுள்ள மத்தள விமான நிலையம்
மத்தள சர்வதேச விமான நிலையத்தை பிராந்திய விமானப் போக்குவரத்து மையமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.
மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்துடன் தொடர்புடைய முதலீட்டு வாய்ப்புகளுக்காக கோரப்பட்டுள்ள ஆர்வ முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று, மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
புவியியல் அமைவிடம்
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், மத்தள சர்வதேச விமான நிலையத்தை விமானப் போக்குவரத்துத் துறைக்கு உகந்த வகையில் அபிவிருத்தி செய்ய திட்டதிட்டுள்ளோம்.
கடந்த காலங்களில் உருவாகியுள்ள சில சவால்களுக்கு தீர்வுகளை வழங்கி, விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளை முறையாக அபிவிருத்தி செய்தல், பாதுகாப்பு வழிமுறைகளை பலப்படுத்துதல் மற்றும் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்குதல் என்பவற்றுக்காக புதிய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதன் காரணமாக இம்முறை முதலீட்டாளர்களிடம் கணிசமான ஆர்வமும் சாதகமான பிரதிபலிப்பும் காணப்படுகிறது.
இலங்கையின் மூலோபாய ரீதியிலான புவியியல் அமைவிடம் காரணமாக, மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை பிராந்திய விமானப் போக்குவரத்து மத்திய நிலையமாக மாற்றுவதற்கான பெரும் சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது என்றும் பிரதியமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
செவ்வாய் - குரு உருவாக்கும் திரிஏகாதச யோகம்... ஜூன் மாதத்தில் இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி! Manithan
தமிழ்நாட்டில் அதிக 100 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்த நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா? Cineulagam
3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்: போர்ச்சுகல் பொலிஸார் அதிரடி News Lankasri