ஹஜ் யாத்திரிகர்களின் நலன்களைக் கவனிக்க பிரதியமைச்சர் முனீர் முளப்பர் சவூதி பயணம்
இலங்கையில் இருந்து இந்த முறை புனித ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ள ஹஜ்ஜாஜிகளின் நலன்களைக் கவனிப்பதற்காக பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் சவூதி அரேபியா சென்றடைந்துள்ளார்.
இலங்கையின் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் பிரதி அமைச்சரும், ஜனாதிபதியின் ஹஜ் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளருமான முனீர் முளப்பர் தலைமையிலான குழு நேற்று (23) சவூதி அரேபியாவின் ஜித்தாவில் அமைந்துள்ள கிங் அப்துல் அஸீஸ் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தது.
புதைக்கப்பட்டிருந்த சிறுமியின் இரத்தம் தோய்ந்த ஆடை.. பொலிஸாரை கத்தியால் துரத்த வேண்டிய நிலையில் அதிகாரிகள்
சவூதி பயணம்
விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதி அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினரை, ஜித்தாவிற்கான இலங்கைத் தூதர் நீதிபதி எம்.டி. முகமது லஃபார் மற்றும் தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.

ஹஜ் கடமைகளுக்காக இலங்கையிலிருந்து செல்லும் 3,500 யாத்திரிகர்களுக்கான தங்குமிட வசதிகள், போக்குவரத்து, மருத்துவம் மற்றும் ஏனைய அத்தியாவசிய நலன்புரிச் சேவைகள் முறையாகச் செய்யப்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகளுடன் இணைந்து பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் நேரில் களஆய்வு செய்து, கண்காணிக்கவுள்ளார்.
அடுத்துவரும் 3 நாட்களுக்கு வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri
தமிழ்நாட்டில் அதிக 100 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்த நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா? Cineulagam