சமையல் எரிவாயு விற்பனை தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல்
சமையல் எரிவாயு விற்பனை தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு விற்பனை செய்யும், விநியோகம் செய்யும் மற்றும் உற்பத்தி செய்யும் அனைத்து தரப்பினருக்கும் இந்த வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் 12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு தட்டுப்பாடு இன்றி விநியோகம் மற்றும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர்களை போதியளவு கையிருப்பில் பேணுமாறு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.