பௌசியை நாடாளுமன்ற உறுப்பினராக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு
ஏ.எச்.எம்.பௌசியை நாடாளுமன்ற உறுப்பினராக அறிவித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலின் போது, கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய முஜிபுர் ரஹ்மான் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.
இந்த நிலையில் குறித்த பதவி வெற்றிடத்திற்காக அடுத்த அதிகபடியான விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்ட ஏ.எச்.எம்.பௌசி நியமிக்கப்பட்டுள்ளார்.
விசேட வர்த்தமானி அறிவித்தல்
தேசிய தேர்தல் ஆணைக்குழு இது தொடர்பிலான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
பௌசி, பல அரசாங்கங்களின் ஆட்சிக் காலங்களில் முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் முஜிபுர் ரஹ்மான், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan
