லான்சாவின் புதிய கூட்டணியுடன் ரணில் பேச்சுவார்த்தை
பொது ஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சாவினால் உருவாக்கப்பட்ட புதிய கூட்டணிக்கு ஆதரவளிக்கும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்துள்ளார்.
இதன்போது அனுர பிரியதர்சன யாப்பா, சுதர்சிஷனி பெர்னாண்டோபுள்ளே மற்றும் பிரியங்கர ஜயரத்ன ஆகியோரையே ஜனாதிபதி சந்தித்துள்ளார்.
இந்நிலையில் உத்தேச ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, அடுத்த ஆண்டு ஜனவரியில், ஜனாதிபதி விக்ரமசிங்க பாரிய அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்வார் என மூவரும் கருத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத் தலைவர்கள் கூட்டம்
இதற்கமைய அனுர பிரியதர்சன யாப்பா ஏற்கனவே புதிய கூட்டணியின் இடைக்காலத் தலைவராக செயற்பட்டு வருகின்றார்.
இதன்படி முதல் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தை எதிர்வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதி குருநாகலில் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து கொழும்பில் அவ்வாறானதொரு கூட்டம் இடம்பெறவுள்ளது. இதற்கிடையில் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளித்து வரும் சுமார் 105 தொழிற்சங்கங்களின் குழுக்களை லன்சா இந்த வாரம் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.