ஒதுக்கீட்டுச் சட்டமூல சான்றிதழ்களுக்கு சபாநாயகர் ஒப்புதல்
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம், பெறுமதி சேர் வரி (திருத்தம்) மற்றும் நிதிச் சட்டமூலங்கள் தொடர்பான சான்றிதழ்களுக்கு நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்த ஒப்புதல் நேற்று (14.12.2023) வழங்கப்பட்டுள்ளது.
கணிசமான அளவு நிதி ஒதுக்கீடு
2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் அரசு ஊழியர் வேதனம் ஓய்வூதிய பலன்கள், அஸ்வசுமா போன்ற வறுமை நிவாரண திட்டங்கள, கல்வி, சுகாதாரம் மற்றும் சாலை உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றிற்கு கணிசமான அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
இந்த நிலையில் அரசாங்கத்தின் முதன்மை வருவாய் உருவாக்கும் முன்மொழிவுகளின் அடிப்படையில் ஜனவரி 1 முதல் பெறுமதி சேர் வரி விகிதத்தை 15வீதம் முதல் 18வீதம் வரை அதிகரிக்கப்படுகிறது.
முன்னர் விலக்கு அளிக்கப்பட்ட கிட்டத்தட்ட 100 பொருட்கள் மற்றும் சேவைகள் இந்த வற் வரிக்குள் கொண்டு வரப்படுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
