தமிழரின் இணைப்பாட்சி கோரிக்கையின் தோற்றம்: மட்டக்களப்பில் விழிப்புணர்வு கண்காட்சி(Photos)
இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழரின் இணைப்பாட்சி கோரிக்கையின் தோற்றம் எனும் கருப்பொருளில் விழிப்புணர்வு கண்காட்சியானது மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் இலங்கை அரசினால் திட்டமிட்டவகையில்
மேற்கொள்ளப்பட்டுவரும் இன ஒடுக்குமுறை மற்றும் அடக்கு முறைகளை பிரதிபலிக்கும்
வகையில் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி இன்று (14.12.2023) இடம்பெற்றுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் கிழக்குமாகாண அங்கத்துவ அமைப்புக்கள் இணைந்து நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.
மீளப் பெறமுடியாத சமஷ்டி முறை
இதன்ஆரம்ப நிகழ்வாக தன்னாமுனை பொது விளையாட்டு மைதானத்தில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து தமிழர்களுக்கான சமஸ்டி அதிகாரத்தை வலியுறுத்தும் வகையலான ஊர்வலம் நடைபெற்றது.
இதன்போது கிழக்கு மாகாணத்தில் அழிக்கப்படும் வரலாறுகள் தொடர்பான ஆவண தொகுப்பு வெளியிடப்பட்டது.
ஐக்கிய இலங்கைகக்குள் ஒருங்கிணைந்த வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு எனும் தலைப்பில் மக்கள் பிரகடனம் வெளியிடப்பட்டது.
குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவுகளின் சங்க பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |














ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 2 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
