சமூக வலைத்தள பாவனையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை! அவசர இலக்கமும் அறிவிப்பு
மத ரீதியான வன்முறைகளை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத ரீதியான வன்முறைகளை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடுவோரை விசாரிக்க பிரத்தியேகமான குழுவொன்றை உருவாக்குமாறும் பொலிஸ் கணினி குற்றப்பிரிவுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.
அவசர இலக்கம் அறிவிப்பு
இதன்படி, வன்முறைகளை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை பதிவிடுவோருக்கு எதிராக முறைபாடுகள் அளிப்பதற்கு விசேட தொலைப்பேசி இலக்கங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
0112300637, என்ற தொலைப்பேசி இலக்கத்தினூடாகவும் 0112381045 என்ற தொலைநகல் இலக்கத்தினூடாகவும் முறைபாடு அளிக்கமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ccid.religious@police.gov.lk என்ற மின்னஞ்சல் வழியாகவும் முறைபாடுகளை அளிக்க முடியும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தலைவர் பிரபாகரனை கடல்வழியாக காப்பாற்ற நடந்த கடைசி முயற்சி: மெய்ப்பாதுகாவலர் கூறும் முக்கியமான தகவல் (Video)
