பொது மக்களுக்கு பயந்து ஒளிந்து திரியும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்
இலங்கையில் பொது மக்களுக்கு பயந்து ஒளிந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களை கடந்து செல்லும் போது மக்கள் தம்மை தாக்குவார்கள் என அஞ்சுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கை முழுவதும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையத்தை நெருங்கும் போதே முகத்தை மூடிக்கொள்கிறேன்.
யாராவது அடிப்பார்கள் என சாரதியிடம் கூறியுள்ளேன். சீக்கிரம் அவ்விடத்தை விட்டு செல்வோம். இல்லை என்றால் அப்படியொரு நிலை உருவாகும்.
இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் வெறுப்புடன் உள்ளனர். நானும் 12 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன் ஆனால் தற்போது விரக்தி மாத்திரமே மீதமாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக ஆளும் கட்சியிலுள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.





சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
