தென் கொரியாவின் விமானப் பாதுகாப்பு வரலாற்றில் நடந்த மிக மோசமான சம்பவம்!
தெற்குக் கொரிய கடற்படையின் P-3 ரகக் கண்காணிப்பு விமானம், பயிற்சியின் போது விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்தனர் என கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த விமானம் மே 29ஆம் திகதி, பகல் 1.43 மணியளவில் தெற்குக்கிழக்கிலுள்ள பொஹாங் நகரிலிருந்து புறப்பட்டதுடன், சில நேரங்களில் பிறகு மண்ணில் மோதி தீப்பிடித்துள்ளது.
விபத்திற்கான காரணம்
விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த நால்வரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் கடற்படை அறிவித்துள்ளது.
இந்த விமானம் ஓர் குடியிருப்பு வளாகத்திற்கு அருகே உள்ள மலைப்பகுதிக்கு விழுந்தில் தீ விபத்துக்குள்ளாகியது.
அவசரகால சேவைகள் மற்றும் தீயணைப்புப் படையினர் விரைந்து சென்றதாகவும் பொஹாங் அவசர நிலையத்தினர் தெரிவித்துள்ளனர்.
மோசமான சம்பவம்
தீயணைப்புப் படையினரும் பாதுகாப்புப் படையினரும் நிகழ்விடத்தில் தீயை கட்டுப்படுத்த முயன்று வந்தனர். விமானத்தின் எஞ்சிய பாகங்களில் நீர் தெளிக்கப்பட்ட காட்சிகள் புகைப்படங்களில் பதிவாகியுள்ளன.
தற்காலிகமாக P-3 வகை விமானங்கள் அனைத்தையும் சேவையிலிருந்து ஒதுக்கி வைத்து, விபத்து காரணம் தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக கடற்படை கூறியுள்ளது.
இதற்கு முந்தைய நிகழ்வாக, கடந்த டிசம்பரில் ஜெஜூ ஏரின் பயணிகள் விமானம் முவான் சர்வதேச விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானதில் 181 பயணிகளில் 179 பேர் உயிரிழந்தனர்.
இது கொரியாவின் விமானப் பாதுகாப்பு வரலாற்றிலேயே மிக மோசமான சம்பவங்களில் ஒன்றாக பதிவாகியது.





சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்- பிக்பாஸ் பிரபலங்களுக்கு குவியும் வாழ்த்துகள் Manithan

Ethirneechal: தடபுடலாக நடக்கும் தர்ஷன் கல்யாணம்.. பதற்றத்தில் அறிவுக்கரசி- பொண்ணு யார் தெரியுமா? Manithan
