சிறந்த சுற்றுலாத்தளமாக தென்னிலங்கை கடற்கரை தெரிவு !
தென்னிலங்கையின் கடற்கரைப் பகுதி, குளிர்காலத்தில் சுற்றுலா செல்வதற்கான சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உலகப் புகழ்பெற்ற வோக் சஞ்சிகையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
தென்னிலங்கை கடற்கரையில் காணப்படும் இயற்கை எழில், பல்வேறு கலாசார காட்சிகள், வசதியான தங்குமிடங்கள் போன்றவற்றின் காரணமாக குளிர்காலத்துக்கான மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக வோக் சஞ்சிகையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரை, அதனை அண்டிய பகுதிகளில் காணப்படும் வனசீவராசிகள், தேயிலைத் தோட்டங்கள் என்பன காரணமாக பல்லாயிரம் சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக தென்னிலங்கை கடற்கரை மாறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிறந்த சுற்றுலாத்தளம்
அத்துடன் தென்னிலங்கை கடற்பிராந்தியத்தில் சர்பிங் எனப்படும் அலைச்சறுக்கு, திமிங்கிலங்களைப் பார்வையிடும் வசதி உள்ளிட்ட பல்வேறு இனிய அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருப்பதாகவும் வோக் சஞ்சிகை பாராட்டியுள்ளது.

இவ்வாறான விடயங்கள் காரணமாக குளிர்காலத்தில் வேறு நாடுகளை விடவும் இலங்கையின் தென்பகுதிக் கடற்கரை, சுற்றுலாப் பயணிகளுக்கான மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வோக் சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        