காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை: சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா வழக்கு
காசாவில் பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இனப்படுகொலை செய்வதாக தென்னாபிரிக்கா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளது.
தென்னாபிரிக்காவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று இஸ்ரேல் நிராகரித்துள்ளது.
இந்நிலையில் சர்வதேச நீதிமன்றத்தில் ( ICJ) இஸ்ரேலுக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் இனப்படுகொலை வழக்கின் இரண்டு நாள் பொது விசாரணை இன்று (11.1.2024) வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
கடுமையாக சாடிய இஸ்ரேல்
காசா பகுதியில் இனப்படுகொலை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை இஸ்ரேல் கடுமையாக மறுத்துள்ளது.
அத்துடன் குறித்த வழக்கை கொண்டு வந்ததற்காக தென்னாப்பிரிக்காவை கடுமையாக சாடிய இஸ்ரேல் இந்த வழக்கை "அபத்தமானது" என்றும் இது "இரத்த அவதூறு" என்றும் கூறியுள்ளனர்.
பொதுமக்கள் படுகொலை
அக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் இஸ்ரேல் 23,000க்கும் அதிகமான பொதுமக்களை படுகொலை செய்துள்ளது என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், கொல்லப்பட்டவர்களில் 70 வீதமானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
காசா மீதான இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் இடைநிறுத்தவேண்டும் என்பதற்கான அவசரநடவடிக்கைகள் அவசியம் என தென்னாபிரிக்கா விடுத்துள்ள வேண்டுகோள் குறித்தே சர்வதே நீதிமன்றம் விசேடமாக ஆராயவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |