மீண்டும் மதுபானம் மற்றும் சிகரெட் விலை அதிகரிப்பு
இந்த ஆண்டு மீண்டும் மதுபானம் மற்றும் சிகரெட் விலை அதிகரிக்கலாம் என மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கையில் மதுபானம் மற்றும் சிகரெட்டுகளுக்கான விலை சூத்திரத்தையோ அல்லது மதுபானத்திற்கு மது வரி விதிக்கும் முறையையோ முன்மொழிந்துள்ளதால் விலைகள் அதிகரிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நாட்டில் வற் வரி திருத்ததிற்கு அமைய மதுபானம் மற்றும் சிகரெட் விலைகள் (1.1.2024) முதல் அதிகரிக்கப்பட்டிருந்தன.
IMF விலை சூத்திரம்
இதன்படி (1.1.2024) முதல் 750 மில்லி லீட்டர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதுடன் மது வரி மற்றும் வற்வரி அதிகரிப்புடன் சிகரெட்டின் விலை 4 வகைகளின் கீழ் அதிகரிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, சிகரெட்டின் விலை 5 ரூபா, 15 ரூபா, 20 ரூபா மற்றும் 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் IMF விலை சூத்திரத்தின் படி மது மற்றும் சிகரெட்டு விலைகள் மீண்டும் உயர்வடையும் என போதைப்பொருள் தகவல் மையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |