அபார வெற்றியுடன் தொடரை கைப்பற்றிய இலங்கை அணி
புதிய இணைப்பு
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றிப் பெற்று இலங்கை அணி 2 - 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக இந்த போட்டி இடம்பெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 22.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 96 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
சிம்பாப்வே அணி சார்பில் Joylord Gumbie அதிகபட்சமாக 29 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.பந்து வீச்சில் வனிந்து அசரங்க 7 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
போட்டியின் இடையில் மழை குறுக்கிட்டமையினால் இலங்கை அணிக்கு 27 ஓவர்களில் 97 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் குசல் மெந்திஸ் ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
இந்த போட்டித் தொடரில் முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டிருந்த நிலையில் இரண்டாது மற்றும் மூன்றாவது போட்டிகளில் வெற்றிப் பெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கட் போட்டி சற்றுமுன் ஆரம்பமாக்கியுள்ளது.
குறித்த கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (11.01.2024) நடைபெற்றுவருகின்றது.
அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் சிம்பாப்வே அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
சிம்பாப்வே அணி
போட்டியில் முதலில் துடுப்பாடிய வரும் சிம்பாப்வே அணி 7.4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் இலங்கை அணி சார்பில் அவிஷ்க பெர்னாண்டோ, செவோன் டெனியல், குசல் மெந்திஸ், சதீர சமரவிக்ரம, ஜனித் லியனகே, சரித் அசலங்க, சஹன் ஆராச்சிலாகே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர தில்ஷான் மதுஷங்க ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இலவச வாய்ப்பு
இந்நிலையில், இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டியை இலவசமாக காணும் வாய்ப்பு கிரிக்கட் ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் C&D பிரிவுகள் இவ்வாறு பார்வையாளர்களுக்காக இலவசமாக திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |