2025 ஐசிசி செம்பியன்சிப் இறுதிப்போட்டிக்கு தெரிவான தென்னாபிரிக்க அணி
சுற்றுலா பாகிஸ்தானிய அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கட் டெஸ்;ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 2 விக்கட்டுக்களால் இன்று வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் அந்த அணி, 2025 சர்வதேச கிரிக்கட் சம்மேளன டெஸ்ட் கிரிக்கட் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட 148 ஓட்டங்கள்
முன்னதாக, போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தானிய அணி, தமது முதல் இன்னிங்ஸில் 211 ஓட்டங்களை பெற்றது.
இதற்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, தமது முதல் இன்னிங்ஸில் 301 ஓட்டங்களை பெற்றது.
இந்தநிலையில் இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தானிய அணி, தமது இரண்டாவது இன்னிங்ஸில் 237 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனையடுத்து பாகிஸ்தானிய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 148 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி, 8 விக்கட்டுகள் இழப்புக்கு 150 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Super Singer: பாதியில் பாடலை நிறுத்திய சிறுமி.... அதிருப்தியில் அரங்கம்! நடுவர்களின் முடிவு என்ன? Manithan

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்: அவரின் சம்பளம் மற்றும் சொத்துமதிப்பு தெரியுமா? News Lankasri

Serial update: அத்துமீறிய அறிவுக்கரசி.. கழுத்தை நெறித்தப்படி எச்சரித்த அதிகாரி- தர்ஷன் மாட்டுவாரா? Manithan
