ஐந்தாம் நாள் பலப்பரீட்சையில் இந்திய-அவுஸ்திரேலிய அணிகள்
சுற்றுலா இந்திய அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான போர்ட்ர் - கவாஸ்கர் கிண்ணத்துக்கான நான்காவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று நிறைவுக்கு வந்துள்ளது.
நான்காம் நாள் ஆட்ட நிறைவின்போது, தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் அவுஸ்திரேலிய அணி, 9 விக்கட்டுக்களை இழந்து 228 ஓட்டங்களை பெற்றிருந்தது.
முன்னதாக அந்த அணி, தமது முதல் இன்னிங்ஸில் 474 ஓட்டங்களை பெற்றிருந்தது.
333 ஓட்டங்கள் அதிகம்
இந்தநிலையில் இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 369 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், நாளைய தினம் அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கும் ஓட்ட இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாட ஆரம்பிக்கும்.
தற்போதைய நிலையில் இந்திய அணியைக்காட்டிலும் அவுஸ்திரேலிய அணி, 333 ஓட்டங்களை அதிகமாக பெற்றுள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam
