இலங்கை பொருளாதாரத்தை மாற்றவுள்ள வாழைப்பழம்
இலங்கையில் இருந்து வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படும் புளி வாழைப்பழத்தின் (கதலி) முதல் தொகுதி நாளை (26.11.2022) துபாய்க்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி
விவசாய நவீனமயமாக்கல் திட்டம் விவசாய அமைச்சின் வெளிநாட்டு நிதியின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இந்த திட்டத்தின் கீழ் ராஜாங்கனை பிரதேசத்தில் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள புளி வாழை முதன்முறையாக வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு வொக்ஸ்ஹால் வீதியிலுள்ள டெவலப்மென்ட் இன்டர்பிளான் சிலோன் பிரைவேட் லிமிடெட் (Development Interplan Ceylon PVT LTD) நிறுவனத்தில் புளி வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்யும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வாரத்திற்கு 10,000 டொலர் வருமானம்
துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படும் முதல் தொகுதியாக 12,500 கிலோ புளி வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, இனிமேல் ஒவ்வொரு சனிக்கிழமையும் இலங்கை புளி வாழைப்பழங்கள் துபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாரத்திற்கு 10,000 டொலர் வருமானம் நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் பணிப்பாளர் கலாநிதி ரொஹான் விஜேகோன் தெரிவித்துள்ளார்.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
இந்தியாவுக்கு வரும் புடின்: விமானத்தில் கொண்டு வரப்பட்ட Aurus Senat கார்! மிரட்டும் தனித்துவம் News Lankasri
ஜனனி சொன்ன விஷயம், குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி இதை செய்வாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam