சஜித்திடமிருந்து விலகி ரணிலை நோக்கி நகரும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள்
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகள் சில அதிலிருந்து வெளியேற திட்டமிட்டுள்ளதாக என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக அரசுடன் இணைந்துகொள்வதற்கு அந்த கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இரகசியமாக கலந்துரையாடல்களை நடத்திவந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இரகசிய கலந்துரையாடல்கள்
சர்வகட்சி அரசை அமைப்பதற்கான பேச்சுக்கள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்கும் அதேவேளை, இன்னுமொரு பக்கத்தில் கட்சி தகவல்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் நடப்பதாக கூறப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியில் முன்னாள் உறுப்பினர்களான ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அரசுடன் இணைந்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அரசியல் முன்னோக்கு
நாடாளாவிய ரீதியில் முன்னாள் கோட்டாபய ராஜபக்சவும் அவரது குடும்பதினரையும் பதவி விலகுமாறு போரட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது.
மக்களின் தொடர் போராட்டங்களின் பின் கோட்டாபய அவர்கள் கடந்த ஜீலை 15 ஆம் திகதி தமது பதவியை இராஜினாமா செய்தார்.
இதனை தொடர்ந்து அடுத்த புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலொன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரின் வாக்கெடுப்பின் அடிப்படையில் இடம்பெற்ற இந்த தேர்தலில் 134 வாக்குகளை பெற்று ரணில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
நாட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் போது பல அமைச்சர்களின், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
இவ்வாறு வீடுகளை இழந்த முக்கியஸ்தர்களுக்கு வசதிகளுடனான வீடுகளை அமைத்து தருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எரிசக்தியின் அதிகாரத்தை வெளிநாடுகளுக்கு வழங்கினால் நாட்டுக்குப் பேராபத்து! சஜித் சுட்டிக்காட்டு |