கரு ஜயசூரியவின் ஜனாதிபதி முயற்சிக்கு தடையாக மாறிய சஜித்: வெளியாகிய உண்மை தகவல்
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை அனைத்து கட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியாக்கும் முயற்சிகளுக்கு சஜித் தடைக்கல்லாக செயற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
ஆங்கில ஊடகமொன்று இன்று(24) வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய மற்றும் முன்னாள் பிரதமர் மகிந்த தலைமையிலான அரசாங்கம் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில், கரு ஜயசூரியவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கரு ஜயசூரியவிற்கு ஆதரவு
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் ஊடாக அவரை நாடாளுமன்றம் கொண்டு வந்து அனைத்துக்கட்சி அரசாங்கமொன்றின் ஜனாதிபதியாக நியமிக்கும் செயற்பாட்டுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்துள்ளதுடன் சகல தரப்பில் இருந்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கரு ஜயசூரியவும் தாமாக பதவிகளை தேடி செல்லமாட்டேன் எனவும் தமக்கு நாட்டுக்கு சேவையாற்ற சந்தர்ப்பம் கிடைத்தால் அதனை ஏற்றுக்கொள்வதாகவும் தமது சம்மதத்தை தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து கரு ஜயசூரிய நாடாளுமன்றம் வருவதற்கு வழியேற்படுத்தும் வகையில் மயந்த திசாநாயக்க மற்றும் ஹரீன் பெர்னாண்டோ ஆகிய இருவரும் தங்கள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுக்க தயாராக இருந்துள்ளனர்.
சஜித்தின் மறுப்பு
எனினும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச அதனை தடுத்துள்ளார். அவ்வாறு கரு ஜயசூரிய வந்தால் தனது ஜனாதிபதி கனவு கைக்கு எட்டாது என்ற நிலைப்பாட்டில் அவர் கருவின் மீள் வருகைக்கு தடையாக இருந்துள்ளார்.
இதன் காரணமாக ஏற்பட்ட அதிருப்தியில் ஹரீன் மீண்டும் ரணிலுடன் இணைந்து கொண்டுள்ளார். மயந்தவும் கட்சியின் இளைஞர் அணி பொறுப்பாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை தொடர்பு கொண்டபோது அவர் இந்த விடயத்தை மறுத்துள்ளதோடு அடிப்படை ஆதாரமற்ற செய்தி என தெரிவித்துள்ளார்” என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணிலின் அமைச்சரவையில் இடம்பிடிக்க முயற்சிக்கும் விமல் மற்றும் உதய கம்மன்பில |