எரிசக்தியின் அதிகாரத்தை வெளிநாடுகளுக்கு வழங்கினால் நாட்டுக்குப் பேராபத்து! சஜித் சுட்டிக்காட்டு
எமது நாட்டின் எரிசக்தியை முகாமைத்துவப்படுத்தும் செயற்பாட்டு ரீதியான அதிகாரத்தை வெளிநாடுகளுக்கு வழங்கி, நாட்டின் மின்விளக்கு சுவிட்சை வெளிநாடுகளிடம் ஒப்படைப்பதன் மூலம் நாட்டை இருளில் மூழ்கடிக்கும் நிலையே ஏற்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் குழுவை இன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்தபோதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
புதிய மின்சாரக் கொள்கை
நாட்டின் எரிசக்தி கட்டமைப்பை முன்னோக்கி கொண்டு செல்லும் வகையிலான புதிய மின்சாரக் கொள்கையை உருவாக்குவதே தமது நோக்கமாகும் என்றும், ஆனால் பெரும்பாலானோர் விற்பனை செய்து அல்லது தனியார்மயமாக்குவதையே செய்த வண்ணமுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
"மின்சார சபை ஒரு தேசிய வளம் என்பதோடு அதைப் பாதுகாத்த வண்ணம் முன்னேற்ற வேண்டும். அதனூடாக அதிக இலாபம் ஈட்டுவதற்குத் தேவையான திட்ட வரைவை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் முறையான மின்சார உற்பத்தி செயன்முறையை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். அதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்" என்றார்.
ஜனாதிபதி ரணிலுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் - ஆதரவு குரல் கொடுக்கும் தேரர் |