ஜனாதிபதி ரணிலுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் - ஆதரவு குரல் கொடுக்கும் தேரர்
நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நாட்டை கட்டியெழுப்ப கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென வணக்கத்துக்குரிய பெல்பொல விபாசி நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
போராட்டங்களை நடத்தி ஆட்சியாளர்களை விரட்டியடிக்கும் முறையை விட்டுவிட்டு தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை விடுவித்து மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு பேரழிவை எதிர்நோக்கியிருக்கும் வேளையில் தற்போதைய ஜனாதிபதி அச்சமின்றி சவாலை ஏற்றுக்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அனைத்து சவால்களையும் வெற்றிகொள்ள முடியும் என நம்பிக்கையுள்ளதாக தெரிவித்தார்.

மக்களுடன் சிநேகபூர்வமாக உரையாடிய ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (24) பிற்பகல் சேடவத்த, வெஹெரகொட புராதன விகாரைக்கு சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், அங்கு உபதேசம் செய்து இதனைக் குறிப்பிட்டார்.
விகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி, அரசர் சைத்தியம், போதிதர்மர் மற்றும் புத்தர் ஆலயத்தை வணங்கி சமய வழிபாடுகளில் ஈடுபட்டார். பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மகா சங்கத்தினரைச் சந்தித்து நலம் விசாரித்ததுடன், விகாரைக்கு வந்திருந்த மக்களுடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.
இதேவேளை, அண்மையில் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்கவிற்கு பல்வேறு தரப்பினர்களிடம் இருந்து எதிர்ப்புகள் வெளியாகியுள்ள நிலையில், வணக்கத்துக்குரிய பெல்பொல விபாசி தேரர் ஆதரவாக பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
    
    
    
    
    
    
    
    
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri