நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் ஊடகவியலாளர்கள் புறக்கணிப்புக்கு தீர்வு
நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களிலும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களிலும் ஊடகவியலாளர்களின் அனுமதி மறுப்பானது, பொது மக்கள் உண்மைச் செய்திகளை அறிந்து விடக்கூடாது என்பதற்கான நடவடிக்கையா என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் வினைவிய போது இது தொடர்பில் உரிய தீர்வைப் பெற்றுத் தருவதாக கூறினார்.
பணிப்புரை
இதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு பொறுப்பான நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சிக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று (14) பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி கூறுகையில், இனிவரும் நாட்களில் நடைபெறும் ஒவ்வொரு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கும் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும், இதில் ஊடக அமைச்சில் அங்கீகரிக்கப்பட்ட ஊடக அடையாள அட்டையை கொண்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்




