வடக்கு மாகாண மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு(video)
வடக்கு மாகாண மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வைக்காணும் விதமாக, ஜனவரி மாதம் பாலியாற்று குடிநீர் திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்தத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
வடக்கு மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் பொருட்டு பாலியாற்று நீர் வழங்கல் திட்டத்தை முன்னெடுக்கும் முக்கியமான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்டச்செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.
மக்களின் நலன்சார்ந்த திட்டம்
இதன் தொடர்பில் கருத்து தெரிவித்த சி.வீ.கே.சிவஞானம்,
“பாலியாற்று குடிநீர் திட்டமானது மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமையும்.
இதன்படி குறித்த நீர்வழங்கல் திட்டத்தின் மூலம் எவ்வித பாதிப்புக்களும் மக்களுக்கு ஏற்படாது.
மக்களின் நலன்சார்ந்து மேற்கொள்ளப்படும் ஒரு திட்டமாக இது பார்க்கப்படுகிறது.
நீர்வழங்கல் திட்டத்திற்கு அனைவரினது ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனையே அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவும் கேட்டுக்கொள்கின்றார்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பாக்கியலட்சுமி, தங்கமகள் சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan
