வடக்கு பாலியாறு குடி நீர் திட்டம் ஜனவரியில் ஆரம்பிக்கப்படும்: அமைச்சர் டக்ளஸ் உறுதி
வடக்கிற்கான பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டமானது ஜனவரி முதல் வாரத்தில் ஜனாதிபதியின் வடக்கிற்கான விஜயத்தின்போது ஆரம்பித்து வைக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் இன்று(19.12.2023) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற பாலியாற்று நீர் வழங்கல் திட்டத்தை முன்னெடுக்கும் முக்கிய கலந்துரையாடலில் கூறியுள்ளார்.
ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்
இதன் போது மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் என். சுதாகரன் பாலியாற்று குடிநீர்த் திட்டம்
தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும், இந்த திட்டம் தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் அது கைகூடாத நிலையில் கடந்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
இதேவேளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக அமைச்சரவை இத்திட்டத்திற்கு 250 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கான அங்கீகாரம் கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், நீர்ப்பாசன நீர்வழங்கல் முகாமையாளர்கள், சி.வி.கே. சிவஞானம் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

ஸ்ருதி அம்மா செய்த கேவலமான வேலை, முத்து, ரவிக்கு தெரிந்த உண்மை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
