பெருந்தோட்ட மக்களுக்கு சஜித் ஆட்சியில் தீர்வு: நம்பிக்கை வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி
பெருந்தோட்ட மக்களின் பிரச்சனைகள் அனைத்தும் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) ஆட்சியில் தீர்க்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“இன்றைய சூழ்நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் சொல்லெண்ணா துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.
வேதன பிரச்சனை இழுபறியான நிலையிலேயே இருக்கின்றது. இதை பேச வேண்டியவர்களும் மக்கள் பிரதிநிதி என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி கொண்டு தான் இருக்கின்றார்கள்.
சஜித் பிரேமதாசவின் ஆட்சி
வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு சென்று அமைச்சரானவர்கள் கூட வெறும் சினிமா பாணியில் மலையகத்தில் கேளிக் கூத்துகளை நடாத்தி வருகின்றார்களே தவிர மக்களுக்கு ஏதும் நல்ல விடயம் நடந்ததுபோல் தெரியவில்லை.
எனவே, இன்னும் சில மாதங்களில் சஜித் பிரேமதாசவின் ஆட்சியே மலரப்போகின்றது.
அதில் முதல் பிரச்சனையாக பெருந்தோட்ட மக்களின் காணி பிரச்சனை மற்றும் சம்பள பிரச்சினை ஆகியவை தீர்த்து வைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |