சஜித் அணியுடன் இணைந்த சுதந்திரக் கட்சியின் திஸ்ஸ கரலியத்த
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் மதவாச்சி தொகுதி அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ கரலியத்த ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் அவர் இவ்வாறு இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அனுராதபுரம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்த அவர், சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகாரங்களுக்கான அமைச்சரவை அமைச்சராகவும் உள்ளுர் மருத்துவத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
அவரை ஐக்கிய மக்கள் சக்தியின் மதவாச்சி பிரதேசத்தின் இணை அமைப்பாளராக நியமிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஏற்பாடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |