ஐக்கிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்த மொட்டுக் கட்சி உறுப்பினர்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட பதியத்தலாவ தேர்தல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் திலக் ராஜபக்ச ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவினை தெரிவிக்கும் நோக்கில் இன்று(03) ஐக்கிய மக்கள் சக்தியில் அவர் இணைந்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டத்தின் 218 ஆவது கட்டமாக அம்பாறை, தெஹியத்தகண்டிய, சந்துன்புர தேசிய பாடசாலைக்கு 1,177,000 ரூபா பெறுமதியான திறன் வகுப்பறையொன்றை வழங்கும் நிகழ்வின் போதே அவர் இவ்வாறு இணைந்து கொண்டார்.
இவர் தனது உயர் கல்வியின் பின்னர் இலங்கை இராணுவ மருத்துவப் படையில் இணைந்து பணியாற்றியதுடன் அம்பகவெல்ல பிரதேச வைத்தியசாலை மற்றும் அம்பாறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்தின் பிரதானியாகவும், அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






தமிழ் தலைவர்கள் பெற்றது எதுவுமில்லை ஆயினும் வாய்ச் சொல்லில் வீரரடி..! 19 மணி நேரம் முன்

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam
