வவுனியாவில் திண்ம கழிவுகளை மீள் சுழற்சி செய்யும் திட்டம்(Photos)
வவுனியா, பம்பைமடு பிரதேசத்தில் அமைந்துள்ள திண்ம கழிவுகளை மீள் சுழற்சி செய்யும் திட்டம் ஐ.நா சபையின் இணை நிறுவனம் யுனொப்ஸ் மூலமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
வவுனியா, பம்பைமடுப் பகுதியில் வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை மற்றும் வவுனியா வைத்தியசாலைக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.
திண்ம கழிவுகளை மீள் சுழற்சி செய்யும் திட்டம்
குறித்த கழிவுகளை முறையாக மீள் சுழற்சிக்கு உட்படுத்துவதற்கான முயற்சிகள் நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் ஐ.நாவின் இணை நிறுவனமான யுனொப்ஸ் அதனை மீள்சுழற்சிக்கு உட்படுத்தும் செயற்பாட்டுக்கான உதவியளிக்க முன்வந்திருந்தது.
அதன் முதற்கட்டமாக திட்டமிடல் மேற்கொள்வது தொடர்பில் அறிக்கை தயாரித்தல் என்பவற்றுக்காக பம்பைமடுவில் திண்மக் கழிவுகள் காணப்படும் பிரதேசத்தை நேரில் சென்று யுனொப்ஸ் அதிகாரிகள் பார்வையிட்டதுடன், அது தொடர்பாக தமது அவதானிப்புக்களையும் செலுத்தியுள்ளனர்.
இதன்போது வவுனியா மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ரதீஸ்வரன், வவுனியா
தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் தர்மலிங்கம் யோகராஜா, வவுனியா தெற்கு தமிழ்
பிரதேச சபை உறுப்பினர் அருளானந்தம், நகரசபை மற்றும் பிரதேச சபை
உத்தியோகத்தர்கள் ஆகியோரும் சென்றுள்ளனர்.



