பகவத் கீதையை மேற்கோள் காட்டிய பாகிஸ்தானிய வீரர்
பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் வர்ணனையாளரான சொஹைப் அக்தர் (Shoaib Akhtar) இந்துக்களின் பகவத் கீதையை (Bhagavad Gita) மேற்கோள் காட்டி தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இதன்மூலம், அவர் இன்று இணையத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.
தற்போது தைரியமான அறிக்கைகளுக்கு பெயர் பெற்ற சொஹைப் அக்தர், இந்துக்களின் பகவத் கீதையை மேற்கோள் காட்டி தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளமையே அவர் இணையத்தில் முக்கிய இடம்பிடிக்க காரணமாக அமைந்துள்ளது.
பகவத் கீதை
"கட்டுப்பாடற்ற மனதை விட பெரிய எதிரி இல்லை" என்ற பகவத் கீதையின் துளியை அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, சொஹைப் அக்தரின் பதிவு சில நிமிடங்களில் அதிகமாக பகிரப்பட்டுள்ளது. அதேபோன்று, கலவையான கருத்துக்களையும் சேர்த்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இருபதுக்கு20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் போது, பாதகமான சூழ்நிலையிலும் மனதைக் கட்டுப்படுத்தி செயற்பட்ட இந்திய கிரிக்கட் அணியின் தலைவர் ரோஹித் சர்மாவை இந்த கருத்து குறிப்பதாக குறிப்பிட்டுள்ள சிலர் இதை பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு கிண்டலான கருத்து என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்திய அணி
இருபதுக்கு20 உலகக்கிண்ணத்தை இந்திய அணி வெற்றி கொள்ளும் என்று சொஹைப் அக்தர் முன்னதாகவே கணித்திருந்தார்.
இதேவேளை, மற்றுமொரு பதிவில் ரோஹித் சர்மா சாதித்துவிட்டதாக கூறிய அவர் இந்திய அணி இந்த வெற்றிக்கு தகுதியானது என்றும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |