ஓய்வை அறிவித்தார் இந்திய அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா
இந்திய அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 2 ஆம் திகதி ஆரம்பமாகிய ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று சவால் மிக்கதொரு இறுதிப் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியது.
டி20 உலகக் கோப்பை
இதன் மூலம் டி20 உலகக் கோப்பை செம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக வென்று இந்திய அணி வரலாற்றில் இடம்பிடித்தது.
இந்நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்த நிலையில் இந்திய அணியின் தலைவர் ரோஹித் ஷர்மாவும் ஓய்வை அறிவித்துள்ளார்.
இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களின் இது தொடர்பாக ரோஹித் ஷர்மா கருத்துரைக்கையில்,
"இந்த டி20 உலகக் கோப்பை தொடர் தான் என்னுடைய இறுதிப் போட்டி. ஓய்வு பெறுவதற்கு இதை விட சிறந்த தருணம் இல்லை.
இந்தியாவுக்காக கோப்பை
நாங்கள் கோப்பையை வெல்ல வேண்டும் என விரும்பினோம். இதனை வார்த்தைகளால் கூறுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. இதுவே நான் விரும்பியது.
இந்தியாவுக்காக கோப்பையை வென்றுவிட்டு ஓய்வை தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். தற்போது வென்றுவிட்டேன்.
விடைபெறும் நேரம் இது. ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன்" என கூறியுள்ளார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
