ஓய்வை அறிவித்தார் ரவீந்திர ஜடேஜா!
டி 20 உலகக்கிண்ண கோப்பையை இந்தியா அணியின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடினாலும், முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும், விராட் கோலியின் ஓய்வு அறிவுப்புக்களானது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இந்திய அணியின், முன்னணி சகலதுறை வீரரான ரவீந்திர ஜடேஜாவும் டி 20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,
"நன்றி. நிறைந்த இதயத்துடன், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன்.
டி20 உலகக் கோப்பை
உறுதியான குதிரை பெருமையுடன் பாய்வது போல, நான் எப்பொழுதும் என் நாட்டுக்காக என்னால் முடிந்ததைக் கொடுத்துள்ளேன்.
இனி அந்தப் பணி மற்ற வடிவங்களில் அதைத் தொடரும். டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு நனவாகியுள்ளது.
இது எனது சர்வதேச டி20 கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சம். நினைவுகளுக்கும், வாழ்த்துகளுக்கும், தளராத ஆதரவுக்கும் நன்றி. ஜெய் ஹிந்த்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா சகலத்துரை வீரராக இடம் பெற்றார். இந்த உலகக் கோப்பை தொடரில் அவருக்கு போதிய பந்து வீசும் வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை.
அவருக்கு கிடைத்த சில வாய்ப்புகளிலும் அவரால் பெரிய ஆட்டத்ததை வெளிப்படுத்த முடியவில்லை.
டி 20 போட்டி
அரை இறுதிப் போட்டியில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டிருந்தார். மற்ற போட்டிகளில் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இளம் வீரர்களுக்கு வழி விட்டு ஓய்வை அறிவிப்பதாக ஜடேஜா தெரிவித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக முதல் டி20 போட்டியில் விலையாடிய அவர், இதுவரை 74 டி 20 போட்டிகளில் விலையாடியுள்ள நிலையில், 41 போட்டிகளில் இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடி515 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
மேலும், பந்து வீச்சில் 54 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட்டின் மூன்று முக்கிய வீரர்கள் ஆன ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா வரிசையாக சர்வதேச டி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்திருப்பதை அடுத்து டி20 கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளதாக ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |