9 இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல்! சிக்கலில் இளம் நடிகை
குருநாகல் போதனா வைத்தியசாலையில் 9 இரட்டைக்குழந்தைகள் பிறந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி முற்றிலும் பொய்யானது என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த மாதம் இரண்டு முறை, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலிப்படங்களுடன் இந்த செய்தி சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பொதுமக்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ள செய்தி
பொதுமக்கள் இந்த செய்தியை உண்மையெனக்கருதி விசாரித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த இரட்டைக்குழந்தைகளின் பிறப்பு குறித்த தகவல், சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு நாட்டின் பிரபலமான இளம் நடிகை ஒருவரின் பெயரில் சமூக ஊடக கணக்கில் முதலில் பதிவிடப்பட்டது.
அந்த பதிவில், கிட்டத்தட்ட பதினொரு ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த அவரது சகோதரி, குருநாகல் போதனா வைத்தியசாலையில் இரட்டைக்குழந்தைகளை பெற்றெடுத்ததாக அவரது பெயரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சுமார் ஒரு வாரம் கழித்து, குருநாகல் போதனா வைத்தியசாலையில் ஒரு தமிழ் தாயும் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக மீண்டும் சமூக ஊடகங்களில் தகவல் பதிவிடப்பட்டது.
சம்பவம் குறித்த செய்தி பொதுமக்களிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
வெளியான காரணம்
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், ஒரு குறிப்பிட்ட நபர் தனது முகநூல் பக்கத்தின் பார்வையாளர்களை அதிகரிக்கும் நோக்கில் பதிவிட்ட உண்மைக்கு புறம்பான செய்தி என்பது தெரியவந்துள்ளது.

இந்த செய்தியின் உண்மைத்தன்மை பற்றி அறியாத பலர், இந்த செய்தியை ஏனைய குழுக்களுக்கும் பகிர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பொய்ச் செய்திகளை உருவாக்கி பொதுமக்களைத் தவறாக வழிநடத்துவதைத் தவிர்க்குமாறு சமூக ஊடகப் பயனர்களைக் குருநாகல் போதனா வைத்தியசாலை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 18 மணி நேரம் முன்
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
அடுத்த டிராமாவை போட்ட குணசேகரன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam