அம்பாறையில் கைவிடப்பட்ட வீடுகளில் இடம்பெறும் சமூக சீர்கேடுகள் (Photos)
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியில் சுனாமி அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளில் சமூக சீர்கேடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வீடுகளை சிலர் சட்டவிரோத செயற்பாடுகளான போதைப்பொருள் பாவனை, பாலியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்திவருவதாக கூறப்படுகிறது.
மேலும் இஸ்லாமபாத் பகுதியில் இயங்கி வருகின்ற காதி நீதிமன்றத்தை சுற்றி காணப்படுகின்ற வீடுகள் கைவிடப்பட்டு சுமார் 19 வருடங்களாக பாழடைந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமான செயற்பாடுகள்
இந்நிலையில் விச ஜந்துக்கள், விசப் பாம்புகளின் வாழிடங்களாகவும் இவ்வீடுகள் காணப்படுவதால் பாதுகாப்பற்ற இடமாகவும் விளங்குகின்றது.
இவ்வாறான கைவிடப்பட்ட வீடுகள் உரிய பராமரிப்புக்கள் இன்மையினால் அதன் அருகில் குடியேறி வாழும் மக்கள் அச்சத்தினால் இடம்பெயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இவ்வீடுகளில் இடம்பெறுகின்ற சட்டவிரோதமான செயற்பாடுகளை கட்டுப்படுத்த முன்வர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.