இலங்கையிலிருந்து மிகவும் நுட்பமான முறையில் தங்கம் கடத்திய பெண் கைது! (Photo)
இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற பெண் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சுங்கத்துறையின் அதிகாரிகள், கொழும்பில் இருந்து வந்த குறித்த பயணியை இரகசிய தகவலின் அடிப்படையில் தடுத்து நிறுத்தினர்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட சோதனையில், காலணியின் அடியில் நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 தங்க துண்டுகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். 393 கிராம் தங்கம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு இந்திய ரூபாய் 18.84 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 7 மணி நேரம் முன்
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்
ஈரான் USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதா..! குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா - அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்களம்