யாழில் ஆரம்பமான சிறிய - நடுத்தர சுயதொழிலாளர்களின் உற்பத்திகளின் கண்காட்சி (Photos)
யாழ்ப்பாண வணிகர் கழகம் மற்றும் யாழ். இந்திய தூதகத்தின் இணைந்த எற்பாட்டில் இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட சிறிய நடுத்தர சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளின் கண்காட்சியும் விற்பனையும் இந்திய கலாச்சார முன்றலில் யாழ்ப்பாண வணிகர் கழகம் தலைவர் ப. ஜெயசேகரம் தலைமையில் ஆரம்பமாக்கியுள்ளது
வர்த்தகக் கண்காட்சியானது இன்று புதன்கிழமை(27) காலை 10 மணியளவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதில் 130 உள்ளூர் சிறிய நடுத்தர சுயதொழிலாளர்களின் உற்பத்தி பொருட்களின்
காட்சிக்கூடங்கள் காட்சிப்படுத்துள்ளதுடன் விற்பனையும் இடம்பெற்றுள்ளது.
கண்காட்சி விற்பனை
இவ் நிகழ்வில் யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக உள்ளூர் சிறிய நடுத்தர சுயதொழிலாளர்களின் உற்பத்தி பொருட்களின் கூடராங்களை திறந்து வைத்துள்ளார்.
அத்துடன் மார்கழி 27, 28, 29ம் திகதிகளில் மாலை 4.45 முதல் இரவு 9.15வரை மார்கழி இசைவிழா நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் புகழ்பூத்த இலங்கைக் கலைஞர்கள், இந்தியக் கலைஞர்கள்
பங்குபற்றவுள்ளார்கள். மேலும் தவில் நாதஸ்வர இசைச்சங்கமம், விரலோசை வயலின்
கச்சேரி, நாதசங்கமம், விரலிசை கானம், நாட்டிய நாடகம், மற்றும் இந்தியக்
கலைஞர்களின் பரதநாட்டிய நடன நிகழ்ச்சி, நாட்டுக்கூத்து போன்ற நிகழ்வுகள்
நடைபெறவுள்ளது.
இவ்நிகழ்வில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் உதவிச்செயலாளர் ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா, யாழ்ப்பாண பிரதேசசெயலாளர் எஸ்.சுதர்சன், யாழ்ப்பாண வணிகர் கழகத்தினர் மற்றும் யாழ்ப்பாண இந்திய தூதகத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










