அரசாங்கத்தில் இருந்து விலகுமா மொட்டு கட்சி! ரணிலுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) நடைமுறைப்படுத்தினால் அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyavasam) தெரிவித்துள்ளார்.
நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்த கருத்துக்கு ஜனாதிபதி பொறுப்பேற்கவில்லை என்றால், அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பசிலின் நிலைப்பாடு
அத்துடன், ஜனாதிபதியை தவிர வேறு எவரேனும் நாட்டுக்கு கேடு விளைவித்தால் அதற்கு கட்சி என்ற ரீதியில் எப்பொழுதும் எதிர்ப்பை தெரிவிப்போம் எனவும் தவறு நடந்தால் ஜனாதிபதி நிச்சயம் அரசாங்கத்தை விட்டு விலகுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலை திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாக நடத்துவதே தமது கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்சவின் நிலைப்பாடு எனவும் இந்த நிலையில் எந்தவொரு தேர்தலையும் ஒத்திவைக்கக் கூடாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
