கிளிநொச்சி அரச சேவை நிலையங்களுக்கு டக்ளஸ் விஜயம்
கிளிநொச்சி (Kilinochchi) - தருமபுரம் பிரதேச வைத்தியசாலை மற்றும் போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையம் என்பவற்றிற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தினை, அவர் இன்று காலை (01.06.2024) முன்னெடுத்துள்ளார்.
இதன்போது, காலை 9 மணியளவில் தருமபுரத்தில் அமைந்துள்ள போதைப்பொருள் சிகிச்சை புனர்வாழ்வு நிலையத்துக்கு சென்று அதன் தேவைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.
கட்சி நிதி
இதனைத்தொடர்ந்து, தருமபுரம் வைத்தியசாலைக்கு சென்று வைத்தியசாலையின் நிலைமைகளை பார்வையிட்டு அங்குள்ள தேவைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.
மேலும், போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையம் மற்றும் வைத்தியசாலை ஆகியவற்றில் காணப்படும் சில தேவைகளை நிவர்த்தி செய்ய உடனடியாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கு கட்சி நிதியினை ஒதுக்கி தருவதாக உறுதியளித்துள்ளார்.
அதேவேளை, இதன்போது, போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்தின் வைத்தியர்கள், ஊழியர்கள் தருமபுரம் வைத்தியசாலை பொறுப்பதிகாரி, வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் நோயாளர் நலன் பரிசு சங்க நிர்வாகத்தினர் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri
