பிரித்தானிய மன்னருக்கு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி ரணில்
பிரித்தானிய மூன்றாம் சார்ள்ஸ் (King Charles) மன்னரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அழைப்பு விடுத்துள்ளார்.
ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம (Rohitha Bogollagama), பக்கிங்ஹாம் (Buckingham) அரண்மனையில் நேற்று (31) நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வின் போது மூன்றாம் சார்ள்ஸ் மன்னரிடம் தமது நற்சான்றிதழ் கடிதத்தை வழங்கியுள்ளார்.
உயர் ஸ்தானிகர் போகொல்லாகம மற்றும் அவரது மனைவி தீப்தி போகொல்லாகம, ஆகியோர் ரோயல் மியூஸ் பாரம்பரிய குதிரை வண்டிகள் மூலம் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
முதலாவது இலங்கை உயர்ஸ்தானிகர்
இந்தநிலையில் மன்னருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, ஜனாதிபதி விக்ரமசிங்கவின் சார்பில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு மன்னருக்கு, உயர்ஸ்தானிகர் அழைப்பு விடுத்துள்ளார்.
நற்சான்றிதழ்கள் சமர்பிக்கப்பட்டதன் பேரில் உயர்ஸ்தானிகர் மற்றும் அவரது பரிவாரங்கள் குதிரை வண்டிகளில் இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் குதிரைகளுக்கு சம்பிரதாயமாக கரட் உணவுகளை வழங்குவதன் மூலம் பயணம் நிறைவுற்றது.
இந்தநிலையில் மூன்றாம் சார்ள்ஸ் மன்னரிடம் நற்சான்றிதழ்களை வழங்கிய முதலாவது இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |