யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் சிறந்த உயர்தர பெறுபேறுகள்
வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தர தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி (Jaffna Central College) விஞ்ஞான பிரிவை சேர்ந்த 3 மாணவர்கள் 3ஏ (3A) சித்திகளைப் பெற்றுள்ளனர்.
அதற்கமைய, உயிரியல் விஞ்ஞான பிரிவில் விநாயகச்செல்வன் ஆர்த்திகன் பௌதீக விஞ்ஞான பிரிவில் நாகராஜா ஹரீஷன் மற்றும் ஜெகதீபன் அஜய் ஆகியோர் 3ஏ (3A) சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அத்துடன், உயிரியல் விஞ்ஞான பிரிவில் ராகவன் சேந்தன் 2ஏ பி (2A B) சித்தியையும் ஜெயக்குமாரன் சிந்துயன் பி 2சி (B 2C) சித்தியையும் ததீஸ்வரன் தஸ்வின் 3சி (3C) சித்தியையும் விஜயரஞ்சன் சாருஜன் சி 2எஸ் (C 2S) சித்தியையும் பெற்றுள்ளனர்.
பௌதீக விஞ்ஞான பிரிவு
மேலும், பௌதீக விஞ்ஞான பிரிவில் நகுலேஸ்வரன் நிருஷன் 2ஏ பி (2A B) சித்தியையும் நந்தகுமார் கபீசன் ஏ 2பி (A 2B) சித்தியையும் சிவதர்சன் சந்தோஷன் ஏபிசி (A B C) சித்தியையும் டியாஸ் டானியல் பி 2சி (B 2C) சித்தியையும் உதயராசா ஜீவதாஸ் பி 2எஸ் (B 2S) சித்தியையும் ஜெயராஜ் சண்முகப்பிரியன் 3சி (3C) சித்தியையும் லெமன் கோயேந்திரன் சந்தோஷ் சி 2எஸ் (C 2S) சித்தியையும் சத்தியதாஸ் டினிஸ்காந் சி 2எஸ் (C 2S) சித்தியையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
வட்டுக்கோட்டை
அதேவேளை, இந்துக் கல்லூரியின் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
கணிதப்பிரிவு
மேலும், மதிமுருகன் பவித்திரன் ஏ 2பி, குலேந்திராஜா அபிஷன் 2பி சி, மாதங்கி குமார் 2பி சி, சூரியகாந்தன் மோகனகனன் 2பி சி, சிவலிங்கம் சுருதிகேசன் 2பி சி, திலக்சனா தெய்வேந்திரன் 2பி சி, அஜந்தன் அருளகன் பி 2சி, மஹிஷாஜினி மகேசன் பி சி எஸ், விதுஷா விக்கினேஸ்வரன் 2சி எஸ், டிலக்சனா ரவிக்குமார் பி சி எஸ், மயூரிகா ரத்னசிங்கம் பி சி எஸ் ஆகிய பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
உயிரியல் பிரிவு
உயிரியல் பிரிவில், மாதுஷியா இன்பமதன் 2ஏசி, ஸ்ரீதரன் ஷைதன்யன் ஏபிசி, தேவகுமார் ஜிதுசன் 3பி, சிவனேஸ்வரன் விதுசன் பி2சி, ஸ்ரீகாந்தன் ஸ்ரீஹரன் ஏசிஎஸ், சிவசுப்ரமணியம் சாருஜன் 2சி எஸ், பர்மிஷா சரவணபவானந்தன் பி சி எஸ், தேவகுமார் ஜதுசன் 3சி, யதுஷா கமலநாதன் 2சி எஸ் ஆகிய பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
வணிகப் பிரிவு
வணிகப் பிரிவில், பிரியாழினி யோகேந்திரன் 2ஏ பி, ஆனந்தசித்திரசேனன் கண்ணதாசன் ஏ 2பி, வைஷ்ணவி இராசையா ஏபிசி, நிகேதா பாலேந்திரன் 2ஏ பி, கஜானி ஜீவகுமார் பி 2சி, ஜீவிகா ராமச்சந்திரன் பி 2சி, குகதர்சினி சிவநகுலன் 3சி, காஞ்சனா சேனாதிராசா 3சி ஆகிய பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
கலைப்பிரிவு
கலைப்பிரிவு மாணவர்களான கிந்துஷா ஞானேஸ்வரன் 3ஏ, திஹாளினி ஜோன் ஏ 2பி, ஜெனிபர் தவகுமார் 2ஏ பி, சப்திகா வேவிராசா ஏ 2பி, திவ்யா சுவேந்திரன் ஏ2பி, மாதுரிஷா விஜயராஜ்மோகன் ஏ2பி, காயத்திரி ஆனந்தராசா ஏபிசி, அஜிதா நவநேசன் பி 2சி, வேணுசா ரவிக்குமார் ஏபிசி, நிவ்ஜா கவிதாஸ் 3பி, துவரகா ஜனார்த்தனன் ஏபிசி, காந்தசாமி நீபஜன் 2பிசி, கெனுஜா ரதீஸ் ஏபிசி, யதுஷா மகேந்திரன் 2பி சி, உஷாலினி ஜெயரூபன் 3சி, சபித்ரா தேவராஜ் 3சி, அபர்ணா சந்திரகுமார் பி சி எஸ், நிந்துஷா ரவிச்சந்திரன் 3சி, தர்சிகா தங்கத்துரை 3சி, ரதிசனா பவன்குமார் பி 2சி ஆகிய பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
பொது பிரிவு
அது மாத்திரமன்றி, ராஜேந்திரன் டிசாந்தன் பி 2சி உயிரியல் தொழில்நுட்ப பிரிவு சிலோஜினி நகுலன் ஏ 2பி, ராஜோலினி நந்தகோபால் ஏ 2பி, விதுஷா விக்கினேஸ்வரன் ஏபிசி, பிரேமலதா பூரணச்சந்திரன் 3சி இயந்திரவியல் தொழில்நுட்ப யோகராசா திருஷன் ஏபிசி, விக்னேஸ்வரன் வித்யா ஆனந் 3பி, சிவலிங்கம் விபூஷன் பி2சி ஆகிய பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
யாழ். இந்து மகளிர் கல்லூரி
மேலும், வணிகவியல் பிரிவில் யாழ். இந்து மகளிர் கல்லூரி மாணவி கிர்த்திகா பத்மலோஜன் யாழ். மாவட்டத்தில் முதல் நிலையைப் பெற்றிருக்கிறார்.
யாழ். இந்து மகளிர் கல்லூரியில் இருந்து பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 90 மாணவிகள் விஞ்ஞான, கலை, வணிகவியல் துறைகளில் சிறப்புப் பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறுகின்றனர்.
வணிகவியலில் முதலாம் நிலை மற்றும் கலைத் துறையில் ஐந்தாம் இடம் உட்பட 24 பேர் 3ஏ சித்திகளையும், 18 பேர் 2ஏ,பி சித்திகளையும், 6 பேர் 2ஏ, சீ சித்திகளையும் பெற்றுள்ளதுடன் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை 284 ஆகும்.
அதேவேளை, கலைப்பிரிவில் வஜினா பாலகிருஷ்ணன் என்னும் மாணவி யாழ் மாவட்ட ரீதியில் முதலாமிடத்தையும், நாடளாவிய ரீதியில் 32 இடத்தையும் பெற்றுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |