க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கணிதப்பிரிவில் சாதனை படைத்த மாணவர்கள்
நேற்று வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் கணிதப்பிரிவில் களுத்துறை மாவட்டத்தை சேர்ந்த தக்ஷிலா ஜனதீப என்ற மாணவன் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினையும் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (31) வெளியாகியிருந்தன.
இந்நிலையில், கணித பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தினை மாணவன் மதியழகன் டினோஜனும், இரண்டாம் இடத்தினை ஜனதீப என்ற மாணவனுமட பெற்று சாதனை படைத்துள்ளனர்.
எதிர்கால இலட்சியம்
இவர் பல்லாபிட்டிய வல்பிட்டி வீதியை வசிப்பிடமாகக் கொண்ட ஹொரண டொன் பேட்ரிக் வித்தியாலயத்தில் ஆசிரியையான தம்மிகா பொத்பிட்டியகே மற்றும் ஆயுர்வேத நிறுவனம் ஒன்றின் சந்தைப்படுத்தல் முகாமையாளராக பணிபுரியும் எம்.ஏ. எஸ். ஞானதாசரின் மூத்த மகன் ஆவார்
எதிர்காலத்தில் கணிதத் துறையில் சர்வதேச அளவிலான பேராசிரியராகப் பணியாற்ற வேண்டும் என்பதே தனது இலட்சியம் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |