மே மாதத்தில் பூச்சியத்தை எட்டியுள்ள உணவுப் பணவீக்க விகிதம்: நிதி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்
இந்த ஆண்டு மே மாதத்திற்கான உணவுப் பணவீக்க விகிதம் பூச்சியத்தை அடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் இட்டுள்ள பதிவிலேயே குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும், கூறுகையில், "கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அளவீட்டுக்கமைய (CCPI), 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பணவீக்க விகிதமானது 1.5% ஆக இருந்தது.
பணவீக்க விகிதம்
பின்னர், அது மே மாதத்தில் 0.9% ஆகக் குறைந்துள்ளது. எனவே, இந்நிலைமை நாட்டில் பொருட்களின் விலையேற்றத்தில் பொதுவான மந்த நிலையைக் குறிக்கிறது.
மேலும், ஏப்ரல் மாதத்தில் 2.9% ஆக உயர்ந்திருந்த உணவுப் பணவீக்கம் மே மாதத்தில் 0% ஆகக் குறைந்துள்ளது.
அதாவது, மே மாதத்தில் உணவுப் பொருட்களின் விலைகள் ஓரளவு சாதாரண நிலையை அடைந்ததன் காரணமாக இம்மாற்றத்தினை எட்டியுள்ளது.
The Overall Rate of Inflation, as measured by the Colombo Consumer Price Index, showed a significant decrease in May 2024, dropping to 0.9% from 1.5% in April 2024. This indicates a general slowdown in the rise of prices. Food-Inflation, which had surged to 2.9% in April 2024,… pic.twitter.com/rB6EnhxVWj
— Shehan Semasinghe (@ShehanSema) June 1, 2024
அதேவேளை, உணவு அல்லாத பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 0.9% இலிருந்து மே மாதத்தில் 1.3% ஆக அதிகரித்துள்ளதுடன் ஒரு சீரான வேகத்தில் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகின்றது.
மேலும், வெவ்வேறு துறைகள் ஒரே நேரத்தில் வெவ்வேறு விலை அழுத்தங்களை அனுபவிக்க முடியும் என்பதை பணவீக்க விகிதங்கள் எடுத்துக்காட்டுகின்றன”என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |