இன்ஸ்டாகிராமில் பெண்கள் மீதான தொல்லைகளை கட்டுப்படுத்தும் புதிய அம்சம்
இன்ஸ்டாகிராமில் (Instagram) பெண்கள் மீது அதிகரிக்கும் தொல்லைகளை கட்டுப்படுத்துவதற்காக புதிய அம்சமொன்றை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் பெண் அங்கத்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு எதிரான தொந்தரவுகளும் அதிகரித்து வருகின்றது.
பெண்களுக்கு தவறான முறையில் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள், தகாத வார்த்தைகளால் திட்டுதல் மற்றும் அவர்களை கேலிக்கு உட்படுத்தல் போன்ற விடயங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன.
ரெஸ்டிரிக்ட் அம்சம்
இந்நிலையில், இதற்கு தீர்வு காணும் வகையில் இன்ஸ்டாகிராமில் 'லிமிட்' (Limit) மற்றும் 'ரெஸ்டிரிக்ட்' (Restrict) எனும் இரண்டு புதிய பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் நமது பதிவை யார் காணலாம், யார் கருத்து மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பலாம் என்பதை நாமே தீர்மானிக்க முடியும்.
குறித்த பதிவிற்கு 'ரெஸ்டிரிக்ட்' செய்யப்படும் நபர், பதிவுக்கு கமன்ட் செய்தாலும் அது நமக்கோ பிறர்கோ காண்பிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சமூகப் பிறழ்வான புகைப்படங்களை தவறுதலாக யாருக்கும் அனுப்பினால் அதை இன்ஸ்டாகிராமே மறைத்துவிடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 23 மணி நேரம் முன்

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
