எவர் வெளியேறினாலும் மொட்டுக் கட்சி அழியாது: மகிந்தவின் சகா
எவர் கட்சியை விட்டு வெளியேறினாலும் மொட்டுக் கட்சி வீழ்ச்சியடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மொட்டுக் கட்சியின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள விவகாரம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"மகிந்த ராஜபக்சவின் படத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றம் வந்தவர்களே கட்சி முடிவுக்கு எதிராகச் செயற்படுகின்றனர்.
அவர்கள் அவ்வாறு செயற்பட்டாலும் மக்களும், கட்சி ஆதரவாளர்களும் கட்சியுடன்தான் நிற்கின்றனர்.
மகிந்த ராஜபக்சவிடம்தான் கட்சி இருப்பு உள்ளது. எனவே, யார் வெளியேறினாலும் கட்சி விழாது. சிலர் அரசியல் நாடகங்களை அரங்கேற்றுகின்றனர். அது விரைவில் தெரியவரும்.
ஜனாதிபதித் தேர்தலில் நாம்தான் வெல்வோம். புதிய வாக்குகளைப் பெறக்கூடிய வேட்பாளர் எமது வசமே உள்ளார். ஏனைய வேட்பாளர்களுக்கு புதிய வாக்காளர்களின் வாக்குகளைப் பெற முடியாது." என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
