அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த பணிகளை நிறுத்திய ஐரோப்பிய நாடாளுமன்றம்
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த பணிகளை ஐரோப்பிய நாடாளுமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
கிரீன்லாந்து தீவைக் கைப்பற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கோரிக்கைகள் மற்றும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகளின் மீது வரி விதிப்பதாக அவர் விடுத்த மிரட்டல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் ஸ்கொட்லாந்தின் டர்ன்பெரி (Turnberry) நகரில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரிகளைக் குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டிருந்தது.
பொருளாதாரத் தடை
இதற்காக எதிர்வரும் ஜனவரி 26, 27 திகதிகளில் நடைபெறவிருந்த வாக்கெடுப்புகள் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ட்ரம்ப் புதிய வரிகளை விதிப்பதாகக் கூறி மிரட்டுவது, ஏற்கனவே போடப்பட்ட டர்ன்பெரி ஒப்பந்தத்தை மீறும் செயலாகும் என்று ஐரோப்பிய வர்த்தகக் குழுவின் தலைவர் பெர்ண்ட் லாங் (Bernd Lange) தெரிவித்துள்ளார்.

கிரீன்லாந்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மறுக்கும் டென்மார்க், ஸ்வீடன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட எட்டு நாடுகள் மீது பெப்ரவரி 1 முதல் 10% கூடுதல் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இதற்குப் பதிலடியாக, ஐரோப்பிய ஒன்றியம் தனது "அழுத்த எதிர்ப்பு கருவியை" (Anti-coercion instrument) பயன்படுத்தி அமெரிக்கா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கலாமா என்று ஆலோசித்து வருகிறது.
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam